பொங்கல் பரிசுத்தொகுப்பில் வேட்டி, சேலை உண்டா? அமைச்சர் ஆர்.காந்தி தகவல்

பொங்கல் பரிசு பொருள்களில் கரும்பு இல்லை என்ற அறிவிப்பு காரணமாக அதிமுக போராட்டம் நடத்திய நிலையில் அதன் பின்னர் வேட்டி சேலை இல்லை என்ற தகவல் வெளியானதை அடுத்து மீண்டும் அதிமுக போராட்டம் நடத்தியது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி சேலை வழக்கம்போல் வழங்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது தமிழக அரசின் சார்பில் வேட்டி சேலை வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டு இது குறித்த அறிவிப்பில் சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் அமைச்சர் காந்தி அவர்கள் பொங்கல் பண்டிகைக்கு வழக்கம்போல் வேட்டி மற்றும் சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வேட்டி சேலைகள் வழங்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அமைச்சர் காந்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி, சேலை, ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் என அனைத்தும் வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.