தோனியா ?கோலியா? புனேவில் அடித்துக்கொள்ளும் பெங்களூரு-சென்னை…!!

இன்றைய தினம் ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு அணியோடு மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுவும் குறிப்பாக தல தோனி மீண்டும் கேப்டனாக வந்ததால் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது திறமையை மீண்டும் நிரூபித்தனர்.  மேலும் சிஎஸ்கே அணியின் முன்னாள் தொடக்க வீரர் டுப்லஸ்ஸிஸ் தான் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக உள்ளார்.

ஏற்கனவே இதற்கு முந்தைய ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் பெங்களூரு படுதோல்வி அடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றியின் மூலம் 2022ஆம் ஐபிஎல் சிஎஸ்கே தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இதனால் சிஎஸ்கேவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு ஆர்சிபி வீரர்கள் தயாராகிக் கொண்டு வருகிறார்கள்.

மேலும் பல மாதங்களுக்குப் பின்பு முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் பார்முக்கு வந்துள்ளது அவர்களுக்கு மேலும் பக்க பலமாக அமைந்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இரண்டு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டம் புனே மைதானத்தில் இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு நடக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...