டாஸ் வென்ற தல தோனி பீல்டிங் தேர்வு

5136db35df582f92ec160cd68bf33058

சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியின் 35 ஆவது போட்டியில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அவர்கள் டாஸ் வெற்றி பெற்றார். இதனை அடுத்து அவர் சற்றும் யோசிக்காமல் பந்துவீச முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து இன்னும் சற்று நேரத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பெங்களூர் அணிக்கு மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடதக்கது

இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வென்றால் சென்னையுடன் 12 புள்ளிகளுடன் இணைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் புள்ளி பட்டியலில் உயர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இன்றைய போட்டியில் சென்னை அணியின் வெற்றி பெற்றால் டெல்லி அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இன்றைய அணியில் விளையாடும் வீரர்கள் பின்வருமாறு

சென்னை: ருத்ராஜ், டூபிளஸ்சிஸ், மொயின் அலி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி, ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், ஹசில்வுட்

பெங்களூரு: விராத் கோஹ்லி, படிக்கல், ஸ்ரீகர் பரத், மாக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், டிம் டேவிட், ஹஸ்ரங்கா, சயினி, ஹர்ஷல் பட்டேல், சிராஜ் , சாஹல்,

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.