விளையாட்டு
ஐபிஎல் போட்டிக்கு முன் விழிப்புணர்வு ஏற்படுத்திய தோனி!
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நாளை முதல் தொடங்க இருக்கும் நிலையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அவர்கள் தெரிவித்துள்ளார்
தடுப்பூசி போடுவது என்ற தலைப்பில் ஒரு பொது சுகாதார பிரச்சாரத்தில் அவர் கூறியிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் இன்று மக்களை கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு ஊசியை எடுத்து பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தியுள்ளார்
தடுப்பூசி போடு மாஸ்க் போடு’ என்ற தலைப்பில் அவருடைய பேச்சு மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதல் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில் இன்று தோனி தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
