Sports
தோனியை புறக்கணிக்கவில்லை.. ஓய்வில் உள்ளார் – தேர்வு குழு
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டன் டோனி இடம் பெறவில்லை.
உலகக் கோப்பையில் இளம் வீரர்கள் ஆடிய அளவுகூட, தோனி சிறப்பாக ஆடவில்லை. உலகக் கோப்பையின் போது தோனியைப் பற்றி விமர்சனங்கள் அதிக அளவில் வெளியான வண்ணமே இருந்தன.

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் முதல் யுவராஜ் சிங்க வரை அனைவரும் தோனியின் ஆட்டம் குறித்து வருத்தம் தெரிவித்தனர். கடைசியில் இதனால் சச்சின் மற்றும் தோனி ரசிகர்களுக்கு இடையே ஒரு பெரும் பிரச்சினையாக முடிந்தது.
அதன்பின்னர் தோனி ஓய்வு பெறுவார் என்பதுபோன்ற கருத்துகள் தொடர்ந்து எழுந்தன.
தோனி வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெறாதது அவரைப் புறக்கணிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை என தகவல்கள் வெளியானது.
டோனியை நாங்கள் புறக்கணிக்கவில்லை, 2020-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடுத்த கட்ட விக்கெட் கீப்பரை தயார்படுத்துவதற்கு எங்களுக்கு அவர் அவகாசம் வழங்கியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக அவர் 2 மாத காலம் ஓய்வு கேட்டார். அந்த ஓய்வு காலம்தான் இது என தேர்வுக் குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
