தோனி திரைப்பட நிறுவனத்தின் முதல் படத்தின் ஹீரோ.. டைட்டில் அறிவிப்பு!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்மான தோனி சமீபத்தில் திரைப்பட நிறுவனம் ஒன்றை தொடங்கினார். தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற இந்த திரைப்பட நிறுவனத்தின் எம்டியாக அவரது மனைவி சாக்ஷிதோனி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் சார்பில் முதல் முறையாக ஒரு தமிழ் படம் தயாரிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னால் அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு மற்றும் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்திற்கு எல்ஜிஎம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. LetsGetMarried என்ற என்பதன் சுருக்கமே இந்த டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க உள்ளார். சமீபத்தில் வெளியாகிய சூப்பர் ஹிட் ஆன லவ் டுடே படத்தின் நாயகி இவானா நாயகியாகவும் யோகி பாபு முக்கிய கேரக்டரிலும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இன்னும் பல திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாகவும் குறிப்பாக தமிழில் உள்ள உச்ச நட்சத்திரங்களின் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.