அக்ரசிவ்வை காட்டுவாரா கோலி? கூலாக பவுலிங்கை தேர்வு செய்த டோனி…!!

கிரிக்கெட் உலகில் கோலிக்கு நிகராக தோனிக்கும், தோனிக்கு நிகராக கோலிக்கும் ரசிகர்கள் அதிக அளவு காணப்படுகின்றனர். அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு செய்த சாதனைகள் பல…,

இந்நிலையில் இந்த இரண்டு வீரர்களும் எதிரெதிராக நின்று களத்தில் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியில் கோலி, தல தோனி சென்னை அணியில் உள்ளனர்.

சிஎஸ்கே ஆர்சிபிக்கும் போட்டி என்றாலே ரசிகர்களிடையே ஒரு புத்துணர்வு உருவாகும். அதோடு மட்டுமில்லாமல் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக காணப்படும். அந்த வகையில் இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே-ஆர்சிபி பலப்பரீட்சை மேற்கொள்கிறது.

ஆர்சிபி அணியானது 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அதே வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ளன.

மேலும் இந்த போட்டி புனே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் ஆர்சிபியின் பலமான பேட்ஸ்மேன்களின் கைவரிசை பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்துக் கொண்டுள்ளன. மேலும் கோலி முந்தைய ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.