தனுசு வைகாசி மாத ராசி பலன் 2024!

தனுசு ராசி அன்பர்களே வைகாசி மாதத்தினைப் பொறுத்தவரை 9 ஆம் இடமான பாக்கியஸ்தான அதிபதி 6 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார்.

இழுபறியில் இருந்துவந்த கோர்ட் சார்ந்த வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாக இருக்கும். பூர்விகச் சொத்துப் பிரச்சினைகளில் பங்குதாரர்கள் உங்களின் கோரிக்கைக்கு உடன்படுவார்கள்.

கணவன் வழி உறவினர்களுடன் இருந்துவந்த பிரச்சினைகள் சரியாகும். வீட்டில் பல ஆண்டுகளாக சுப காரியங்கள் தடைபட்டு வந்தநிலையில் தற்போது அடுத்தடுத்த சுப காரியங்கள் நடக்கப் பெறும்.

வேலைவாய்ப்பு என்று கொண்டால் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையப் பெறும். மாணவர்களைப் பொறுத்தவரை மிகப் பிரபலமான கல்லூரிகளில் இடம் கிடைக்கப் பெறும்.

கடுமையாகப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த பலரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். 8 ஆம் இடமான கடகத்தில் சுக்கிரன்- செவ்வாய் சஞ்சாரம் அடிவயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உஷ்ணம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்; மேலும் மறைமுக உறுப்புகளில் தொந்தரவுகள் ஏற்படும். அதிக அளவில் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது.

மேலும் பானக தானம் செய்வது உங்களுக்குப் பெரும் புண்ணியத்தைக் கொடுப்பதாய் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் அதிக அளவில் சண்டை- சச்சரவுகள் இருக்கும். கணவன்- மனைவி இருவரும் பேசும்போது நிதானத்துடனும் பொறுமையுடனும் பேசுதல் வேண்டும்

திருமண காரியங்களைப் பொறுத்தவரை இதுவரை வரன் எதுவும் கிடைக்காத நிலையில் தற்போது உங்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்வதுபோல் வரன் அமையப் பெறும்.

குழந்தைகளின் எதிர்காலம் குறித்த பயம் உங்களிடத்து அதிகரிக்கும். புதிதாக வீடு கட்டி பாதி கிடப்பில் போடப்பட்டு இருந்தநிலையில் தற்போது தேவையான கடனுதவிகள் கிடைக்கப் பெறும்.

வண்டி, வாகனப் பயணங்களை மேற்கொள்ளும்போது கவனம் தேவை.  பைரவருக்கு உணவு அளித்து வந்தால் உங்களின் கஷ்டங்கள் மறையும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews