தனுசு வைகாசி மாத ராசி பலன் 2023!

மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரையிலான காலகட்டம்தான் வைகாசி மாதமாகும்.

தனுசு ராசியினைப் பொறுத்தவரை சூர்ய பகவான் 6 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். கோர்ட் சார்ந்த வழக்குகள் எதுவாகிலும் தீர்ப்பு உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும்.

பலருக்கும் வெளிநாடுகளில் வேலை கிடைத்தல், குடியுரிமை வாங்குதல் என்பது போன்ற நற் செய்திகள் நடக்கப் பெறும். மாணவர்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்திராத கல்லூரிகளிலும் இடம் கிடைக்கும்.

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தோருக்கு நேர்மறையான முடிவுகள் கிடைக்கப் பெறும். செவ்வாய் பகவானும் சுக்கிர பகவானும் இணைந்து இட அமர்வு செய்துள்ளதால் உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் அதிகரிக்கும்.

குடும்பத்திலும் சரி வெளியிடத்திலும் சரி பிரச்சினைகள் ஏற்படுகையில் விட்டுக் கொடுத்துச் செல்லுதல் வேண்டும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனத்துடன் இருத்தல் வேண்டும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

பொருளாதார ரீதியாக பெரிய அளவில் பணப் புழக்கம் இருக்காது; இருப்பினும் கடன் வாங்காமல் சமாளிப்பீர்கள். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும் குடும்பத்துடன் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வருதல் வேண்டும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

பெருமாள் கோவிலுக்கு ஒவ்வொரு வாரம் சனிக் கிழமையும் சென்று வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.