தனுசு: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

தனுசு சுபகிருது வருட பலன்கள்

தலைமைப் பண்பு கொண்ட தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த வருடம் சுமாரான வருடமாக இருக்கும்.

உடல் நிலையினைப் பொறுத்தவரையில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படும், இதன் காரணமாக மருத்துவச் செலவு செய்வீர்கள். நீங்கள் மன தைரியத்துடன் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், அவ்வப்போது பலவீனம் அடைவீர்கள்.

குடும்பத்தில் மனக் கசப்புகள் ஏற்பட்டு சஞ்சலம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பொருளாதார ரீதியாக சற்று தடை தாமதம் இருந்தாலும், அதனை நல்ல விஷயமாகவே நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடல் பலத்தினைக் காட்டிலும் மன பலத்தோடு நீங்கள் செயல்பட வேண்டும். உடன் பிறந்தோரால் ஏற்படும் பிரச்சினையினை நினைத்து பெரிதாக கவலை கொள்வீர்கள்.

ஆனால் நேர்மையுடன் செயல்படுவது மட்டுமல்லாது சமயோசித புத்தியுடன் செயல்படுவது நல்லது. உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்படும், அதனால் அவர்களை எதிர்த்து வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் அனுசரித்துச் செல்வது நல்லது.

உங்களுக்கு நேரம் சரியில்லாத நேரத்தில் ஏற்படும் பிரச்சினையில் இருந்து விடுபட உங்கள் அமைதியே சிறந்த ஆயுதமாக அமையும்.

தாயாரின் உடல் நலனில் மிகுந்த அக்கறை தேவை. அடுத்த குரு பெயர்ச்சி நடக்கும் வரை புதிதாக வீடு சார்ந்த விஷயங்கள் எதிலும் பணத்தினை செலவிட வேண்டாம்.

புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்போர் சில காலம் காத்திருக்க வேண்டும். கடன் கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்துதல் வேண்டும், திருமண காரியங்களைத் தள்ளிப் போடுதல் மிக நல்லது.

திருமண தோஷம் உள்ளவர்கள் நன்கு விசாரித்து திருமணம் செய்ய வேண்டும். எதிரிகளுடனான பிரச்சினைகள் அதிகரிக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews