தனுசு செப்டம்பர் மாத ராசி பலன் 2022!

2 ஆம் இடத்தில் சனி, 6 ஆம் இடத்தில் ராகு, 11 ஆம் இடத்தில் கேது, சூரியன் – சுக்கிரன் 9 வது இடத்தில், செவ்வாய் 6 ஆம் இடத்தில், புதன் 10 ஆம் இடத்தில் உள்ளது.

வேலைவாய்ப்பு ரீதியாக அடுத்த கட்டத்திற்கு நோக்கிச் செல்லும் முயற்சியில் களம் இறங்குவீர்கள். அதேபோல் தொழில் ரீதியாக புதுத் திட்டங்கள் தீட்டி தொழிலை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் களம் இறங்குவீர்கள்.

திருமண காரியங்கள் செய்ய நினைப்போருக்கு உகந்த காலகட்டமாகும், மேலும் வேலைக்குச் செல்லும் பெண்களை எதிர்பார்த்து இருந்தோருக்கு மிகவும் பொருத்தமான வரன்கள் அமையப் பெறும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன் – மனைவி இடையே கசப்பான மனப்பாங்கு நிலவும். ஏமாற்றங்கள் உங்களுக்கு மன அழுத்தத்தினைக் கொடுக்கும்.

மாணவர்களுக்கு சாதகமான மாதமாக உள்ளது, நினைத்தது நிறைவேறும் மாதமாக இருக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும், மேலும் உடல் ஆரோக்கிய ரீதியாக விரயச் செலவுகள் ஏற்படும்.

குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து இருப்போருக்கு காலதாமதம் ஆகும், மேலும் புகழ், கீர்த்தி உங்களை வந்து சேரும். பூர்விகச் சொத்துகள் சார்ந்த பிரச்சினைகள் நீதிமன்றம் உட்பட அடுத்த கட்டத்தினை நோக்கிச் செல்லும்.

வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான அனுகூலங்கள் உண்டு. வீடு, மனை வாங்க நினைப்போர் முன் பணம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment