தனுசு செப்டம்பர் மாத ராசி பலன் 2018!

அன்புள்ள தனுசு ராசியினர்களே, இந்த செப்டம்பர் மாதம் செலவுகள் அதிகரிக்கின்ற மாதமாக இருக்கும். குரு பகவான் 11-ம் வீட்டில் இருப்பதால் பொருளாதார வளர்ச்சி மேம்படும். சுக்கிரன் சொந்த வீடான துலாம் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது தாராளமான பணவரவு வரக்கூடும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கக்கூடும்.

செப்டம்பர் 6-ம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தியாவதால் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் முடித்து காட்டுவீர்கள். அலுவலகத்தில் வேலைசுமை அதிகரிக்கும். உபரி வருமானம் பெருகும். அவ்வப்பொழுது இல்லத்தில் குழப்பான சூழ்நிலை உருவாகலாம். வீண் வம்பு, பிரச்சனைகள் உருவாகலாம் என்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடியுங்கள்.

சூரியன் 9-ம் இடத்தில் ஆட்சி பலத்துடன் இருப்பதால் அரசு சம்மந்தமான காரியங்கள் நல்ல படியாக முடிவடையும். பணவரவு சீராக வந்து கொண்டே இருந்தாலும், செலவுகள் அதிகரிக்கும். எந்த காரியங்கள் செய்ய தொடங்கினாலும் சற்று அலைச்சலுடன் முடிக்க வேண்டிய சூழல் ஏற்படக்கூடும்.

ஜென்மத்தில் இருக்கும் சனி வக்ர நிவர்த்தியாகி இருப்பதால் கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து உரையாடி முடிவு எடுங்கள். ஏழரைச் சனி முதல் சுற்று நடைபெறுபவர்களுக்கு எந்த காரியத்தை தொடங்கினாலும் அதில் எண்ணற்ற இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். சோதனைகளை சாதனையாக மாற்ற  முயற்சி செய்யுங்கள். தன்னம்பிக்கையும், தைரியத்தையும் வளர்த்து கொள்வது நலம் தரும்.

புதன் சூரியனோடு இணைந்து புத-ஆதித்ய யோகம் உருவாகுவதால் புதிய பொறுப்புகள் வரக்கூடும். செப்டம்பர் 15-ம் தேதி புதன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையக்கூடும். சக ஊழியர்களிடம் அளவாக நட்பை வைத்து கொள்ளுங்கள். வெட்டி பேச்சுகளை தவிர்த்திடுங்கள். வீண் பழிக்கு ஆளாக நேரிடும் என்பதால் வேலையில் முழு கவனத்தை செலுத்துங்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment