தனுசு புரட்டாசி மாத ராசி பலன் 2022!

2 ஆம் இடத்தின் அதிபதி சனி பகவான் வக்கிர கதியில் இருந்து நேர்கதிக்கு மாறுகிறார், தன ஸ்தானத்தில் மேம்பட்டுக் காணப்படுவீர்கள்.

குடும்பத்தில் பணவரவு சந்தோஷம், அமைதி மற்றும் நிம்மதியினைக் கொடுக்கும், 7 ஆம் இடத்து அதிபதி புதன் பகவானும், 9 ஆம் இடத்து அதிபதி சூரியனும் குரு பார்வையில் இருக்கின்றனர்.

11 ஆம் இடத்தில் கேது பணவருவாய், பொருள் வருவாய் என பொருளாதாரரீதியாக திருப்புமுனையினை ஏற்படுத்துவார்.

யோகபாக்கியங்கள் நிறைந்த மாதமாக இருக்கும், ஜனவரிக்கு மேல் ஏழரை சனி முடியவுள்ளதால் சனி பகவானுக்கு ஒவ்வொரு சனிக் கிழமையும் எள் எண்ணெய் தீபமிட்டு வழிபாடு செய்தல் வேண்டும்.

தாய்வழி சொந்தங்கள் வீட்டிற்குச் சென்று வருவீர்கள், சொந்தங்கள் ஆதரவாகச் செயல்படுவீர்கள். வீடு இல்லாமல் வாடகைவீட்டில் இருந்தவர்கள் சொந்தவீடு வாங்கவோ அல்லது கட்டத் துவங்கவோ செய்வீர்கள்.

வண்டி, வாகனங்கள் புதிதாக வாங்குவீர்கள். குழந்தைகள் கல்வி மேம்பட்டு இருப்பார்கள். 5 ஆம் இடத்தில் உள்ள ராகு பூர்விகச் சொத்துகளால் பிரச்சினைகள் ஏற்படும், பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.

உடல் நலன் குறைந்து காணப்படுவீர்கள். செவ்வாய் பகவான் 6 மற்றும் 7 ஆம் இடங்களுச் செல்கிறார். எந்தவொரு பிரச்சினையிலும் மாட்ட மாட்டீர்கள், வராக் கடன்கள் வசூலாகும்.

வாழ்க்கைத் துணையால் பொருளாதார ரீதியான முன்னேற்றம் இருக்கும், பட்டங்கள் மற்றும் பதவிகள் தேடிவரும் காலமாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.