Connect with us

தனுசு ராசி பங்குனி மாதம் ராசி பலன்கள் 2018!

Astrology

தனுசு ராசி பங்குனி மாதம் ராசி பலன்கள் 2018!

தனுசு ராசியினருக்கு இந்த பங்குனி மாதம் எடுக்கும் முயற்சிகள், திட்டமிடும் காரியங்கள் யாவும் வெற்றி கிட்டும் மாதமாக இருக்க போகிறது. சூரியன் ராசியில் இருந்து நான்காம் வீட்டில் வருவதால் தடைபட்டு இருந்து வந்த காரியங்கள் எல்லாம் முடிவடையும். நான்காம் இடத்தில் இருக்கும் புதன், சுக்ரன் போன்ற கிரகங்கள் அதிக அளவில் நன்மைகள் செய்யும் விதமாக அமைந்திருக்கிறது.

குரு 12 ஆம் வீட்டில் இருக்கும் வரை உங்களைப் பற்றி வீண் பேச்சுகள், விமர்சனம், கேலி பேச்சுகள் உண்டாகும். அதனை பொருட்படுத்தாமல் உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பல வித பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

ஏப்ரல் 10-ம் தேதிக்குப் பிறகு குரு பகவான் வக்கிரம் பெற்று துலாம் ராசிக்கு வருவதால் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி அடைய உதவி புரிவார். குரு பகவானால் ஏற்பட்ட அலைச்சல், வீண் விரயம் எல்லாம் ஏப்ரல் 10- ம் தேதிக்கு பிறகு மறையும். பக்தி கூடும், விடுபட்ட பிரார்த்தனைகள் எல்லாம் நல்ல படியாக செய்து முடிப்பீர்கள்.

தைரியம் கூடி, மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பெரும் மாதமாக இருக்கப் போகிறது. பூர்விக சொத்துகள் சம்பந்தமாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகி, நல்ல விதமாக முடியும். வங்கி கணக்கில் சேமிப்பு வைப்பு கூடும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யும் மாதமாக இருக்கும். திட்டமிட்டபடி பொன், பொருள், புதிய வேலை மற்றும் வீடு வாங்குவது என்று எல்லாம் அமையக்கூடும்.

இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி கணவன் மனைவி இடையே அன்பு பெருகும். மார்ச் 18-ம் தேதிக்கு பிறகு உறவினர்களிடம் மனக்கசப்பான விஷயங்கள் வரக்கூடும் என்பதால் பேச்சில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் ராசியில் செவ்வாய் மற்றும் சனி சேர்ந்து இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். முன்கோபம் அதிகமாக வரும் என்பதால் தியானம் செய்யுங்கள். மனதை ஒருநிலை படுத்துங்கள். சக ஊழியர்களின் மத்தியில் விரோதம், போட்டி, பொறாமை வரக்கூடும் என்பதால் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

புதிய வேலைத் தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு மனதிற்கேற்ற வேலை அமையும். தனுசு ராசி பெண்களுக்கு இந்த பங்குனி மாதம் சிறப்பாக அமையும். குடும்பம் மற்றும் சமூகத்தில் செல்வாக்கு, மதிப்பு உயரும். மார்ச் 22-ம் தேதிக்குப் பிறகு எதிர்ப்பாராத வகையில் தனலாபம் உண்டாகும்.

உணவு, மருந்து, இரும்பு, கெமிக்கல் போன்ற தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். புதிய வியாபார யுக்தி பயன்படுத்தி லாபத்தை பெருக்குவீர்கள். மாணவர்கள் போட்டி, பந்தியங்கள் மற்றும் தேர்வு போன்றவற்றில் வெற்றி காண்பார்கள்.

பரிகாரம்:

அஷ்டமி நாட்களில் பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடவும். ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்துவந்தால் அதிகளவில் நன்மை உண்டாகும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Astrology

 • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

  Rasipalan

  இன்றைய ராசிபலன் – 17/05/2022

  By

  *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சிறு மற்றும் குறுந்தொழில்...

 • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

  Rasipalan

  இன்றைய ராசிபலன் – 16/05/2022

  By

  *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். இன்று சந்திராஷ்டமம் ஆரம்பமாவதால் நிதானம், கவனம், பொறுமை,...

 • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

  Rasipalan

  இன்றைய ராசிபலன் – 15/05/2022

  By

    *_🔯 மேஷம் -ராசி: 🐐_* தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள்...

 • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

  Rasipalan

  இன்றைய ராசிபலன் – 14/05/2022

  By

  *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எதிர்பாராத தனவரவு கிடைக்கும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வாழ்க்கை துணையின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள்...

 • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

  Rasipalan

  இன்றைய ராசிபலன் – 13/05/2022

  By

    *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய...

To Top