தனுசு பங்குனி மாத ராசி பலன் 2023!

தனுசு ராசியினைப் பொறுத்தவரை பங்குனி மாத முற்பாதியில் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதுத் தொழில் துவங்குதல், தொழில் அபிவிருத்தி என வளர்ச்சிப் பாதையில் பயணிப்பீர்கள்.

வேலை செய்யும் இடங்களில் சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். திருமண வயதில் இருப்போரைப் பொறுத்தமட்டில் ராசிக்கு 4 ஆம் இடத்திற்கு புதன் இடப் பெயர்ச்சியாகி நீச்ச பங்கம் அடைவதால் மன நிறைவான வரன் அமையப் பெறும்.

நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெறுவர். மேலும் தொழில் சார்ந்த அபிவிருத்தியில் அறிவுசார்ந்த முதலீடுகள் உங்களுக்கு பண வரவினைக் கொடுக்கும். தாயாரின் அனுகூலங்கள் கிடைக்கப் பெறும், மேலும் தாய்வழி உறவினர்களால் பணரீதியான உதவிகள் கிடைக்கும்.

தொழில்ரீதியாக எதிரிகள் அதிகரித்தாலும், தொழில்ரீதியாக பெரும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலையால் மன அழுத்தம் ஏற்படும், புது வீடு கட்டும் முயற்சி முடிவுக்கு வரும்.

4ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான், 7ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் இருவரும் தசம ஸ்தானத்தைப் பார்க்கின்றனர். தொழில்ரீதியாக திடீர் அதிர்ஷ்டங்கள் உங்களுக்குக் கைக் கொடுக்கும்.

வியாபாரிகள் கடந்த காலங்களில் இருந்த தடுமாற்றங்களில் இருந்து மீண்டு தெளிவான பாதையில் தன வரவுடன் பயணிப்பீர்கள். மாணவர்களின் உயர் கல்விரீதியான கனவுகள் நனவாகும். மாத இறுதியில் தேவையற்ற ஆரோக்கியச் செலவுகள் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews