தனுசு அக்டோபர் மாத ராசி பலன் 2022!

2 ஆம் இடத்தில் சனி, 4 ஆம் இடத்தில் குரு, 10 ஆம் இடத்தில் சூர்யன், சுக்கிரன், புதன், 7 ஆம் இடத்தில் செவ்வாய் என கோள்களின் இட அமைவு உள்ளது. கோள்களின் இட அமைவு தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனையே கொடுக்கும்.

வேலைவாய்ப்புரீதியாக பதவி உயர்வு, இடமாற்றம், சம்பள உயர்வு என நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். தொழில்ரீதியாக லாபம் ஏற்படும், தொழிலை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட நினைப்போர் தாரளமாக ஈடுபடலாம்.

செவ்வாயின் பார்வை உங்களுக்குத் தைரியம் கொடுக்கும். குரு உங்களுக்கு உகந்த இட மாற்றத்தினைக் கொடுப்பார். புதன் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க உதவுவார்.

திருமண முயற்சியில் இருப்போருக்கு வரன் கைகூடும் காலமாக இருக்கும், அதேபோல் புதுமணத் தம்பதிகள் இடையேயான அன்பு அதிகரிக்கும். குடும்ப உறவினைப் பொறுத்தவரை இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கசப்பான அனுபவங்கள் குறையும்.

மாணவர்களுக்கு மிகச் சிறந்த காலகட்டமாகும், உங்களின் கனவு ஈடேறும் மாதமாக இருக்கும். உடல் நலனைப் பொறுத்தவரை மிகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள், மனநலன் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

உடன் பிறப்புகளுடனான அன்பு அதிகரிக்கும், அசையாச் சொத்துகளில் முதலீடு செய்வீர்கள், தங்கநகைகளில் சேமிப்பினைச் செய்வீர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment