தனுசு நவம்பர் மாத ராசி பலன் 2022!

இடப் பெயர்ச்சி காரணமாக சனி பகவான் ஏழரைச் சனியின் பலனை நிறுத்திவிடுவார். செவ்வாய் பகவான் 7 ஆம் இடத்தில் இருந்து 6 ஆம் இடத்திற்கு நகர்கிறார். சூர்யன், சுக்கிரன், புதன் 12 ஆம் இடத்தில் இருப்பர்.

வேலைவாய்ப்புரீதியாக நீங்கள் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பீர்கள். ஆனால் இருக்கும் இடத்தினை தற்போதைக்குத் தக்க வைத்துக் கொள்வதே சிறப்பானது.

தொழில்ரீதியாக அபிவிருத்தி போன்ற முயற்சிகளை தற்போதைக்கு ஒத்தி வைக்கவும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன்கள் அமைவதுபோல் இருக்கும், ஆனால் தடங்கல்கள் ஏற்படும்.

திருமண வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே மன வெறுப்பு ஏற்படும். சொத்துகள் வாங்குவதற்கு முன்பணம் கொடுக்கலாம், வண்டி, வாகனங்கள் ரீதியாக பிரச்சினைகள் ஏற்படும்.

மாணவர்கள் கல்விரீதியாக மந்தநிலையில் காணப்படுவார்கள். கோள்களின் இடப் பெயர்ச்சி ஆதாயமானதாக இல்லாவிட்டாலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாய் இல்லை.

குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படும், நண்பர்கள் பணரீதியாக உதவிகள் கேட்பார்கள். முதியோர்கள் இதுவரை உடல் நலன்ரீதியாக சந்தித்த பிரச்சினைகளில் இருந்து ஓரளவு மீள்வார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews