தனுசு மே மாத ராசி பலன் 2023!

தனுசு ராசியினைப் பொறுத்தவரை மே மாதத்தில் குரு- ராகு-சூர்யன்- புதன் என நான்கு கிரகங்களும் 5ஆம் இடத்தில் உள்ளது. சனி பகவான் 3ஆம் இடத்தில் உள்ளார்.

புது வேலை, புது முயற்சி, புது மாற்றங்கள் என உங்கள் வாழ்க்கையில் புத்துணர்வு கிடைக்கும் மாதமாக மே மாதம் இருக்கும். தைரியத்துடன் எந்தவொரு முயற்சியினையும் தயங்காமல் செய்தால் வாழ்க்கையினை ஜெயிக்க முடியும்.

தொழில்ரீதியாக திருப்தியான மனநிலையுடன் இருப்பீர்கள். எடுக்கும் முயற்சிகள் ஆதாயப் பலனகளைக் கொடுக்கும். பொருளாதாரரீதியாக மனநிறைவாக இருப்பதுபோல் உணர்வீர்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை தடைகள் அனைத்தும் தகர்த்து எறியப்பட்டுவிட்டன; வரன்கள் நீங்கள் எதிர்பார்த்ததுபோல் அமையப் பெறும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான சங்கடங்களை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மேலும் கணவன் – மனைவி இடையேயான அன்பு மற்றும் புரிதல் அதிகரிக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை உயர் கல்விரீதியாக உங்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.

வீடு, மனை வாங்குதல் போன்ற விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். கடனால் கட்டி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த வீடு கட்டி முடிக்கப்படும். உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை சிறு சிறு உடல் தொந்தரவுகள் இருக்கும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews