தனுசு மாசி மாத ராசி பலன் 2023!

திருமணத்திற்குண்டான காலகட்டம்தான் இது, இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி திருமணத்திற்கான வரன் பார்த்தல், திருமண உறுதி செய்தல், திருமணம் செய்தல் என விறுவிறுவென அனைத்தையும் செய்து முடியுங்கள்.

கணவன்- மனைவி இடையே மன வெறுமை ஏற்படும், உங்களின் எதிரிகள் ஓடி ஒளிவார்கள். செவ்வாய் பகவானின் ஆசியால் தொழில்ரீதியாக விபரீத ராஜயோகம் கிடைக்கும். வேலைவாய்ப்பு ரீதியாக பிரகாசமான காலமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த கனவு வேலை உங்களுக்குக் கிடைக்கப் பெறும்.

வேலைரீதியாக மேன்மை ஏற்படும். தொழில்ரீதியாக போட்டிகள் ஏற்பட்டாலும் லாபத்திற்குக் குறைவு இருக்காது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எந்தவொரு காரியத்தையும் வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள்.

பல ஆண்டு கனவான புதுவீடு வாங்குதல், வீட்டினைப் புதுப்பித்தல் போன்ற சுப காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கணவனுக்கு உடல் நலன் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகள்ரீதியாக விரயச் செலவுகள் ஏற்படும்.

கடன் வாங்கி சுப காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கல்விரீதியாக மாணவர்கள் கவனச் சிதறல் இல்லாமல் படிப்பர். குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு புத்திர பாக்கிய வரம் கிடைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.