தனுசு கார்த்திகை மாத ராசி பலன் 2022!

நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும் மாதமாக இருக்கும், குரு பகவான் சாதகமான பலனை ஏற்படுத்துவார். சனி பகவானின் பாதிப்புகள் குறையத் துவங்கும் மாதமாக இருக்கும். ஆரோக்கியம் ரீதியாக இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

விரய ஸ்தானத்தில் சுக்கிரன், சூர்யன், புதன் என கிரகங்கள் இணைந்துள்ளது. புதன் விரய ஸ்தானத்தில் இருந்து இரண்டாம் பாதியில் இராசிக்குள் வருவதால் பிரிந்தவர்கள் மீண்டும் சேரும் மாதமாக இருக்கும்.

செவ்வாய் மாதம் முழுவதுமே சாதகமாகச் செயல்படுவார்; இதனால் உடன்பிறப்புகளால் உதவிகள் கிடைக்கப் பெறும். வாழ்க்கைத் துணை முரண்பட்ட கருத்துகளுடன் இருந்துவந்த நிலையில் தற்போது அவை அனைத்தும் சரியாகும்.

தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும், பூர்விகச் சொத்துகள் ரீதியாக விரயச் செலவுகள் ஏற்படும். தொழில் செய்வோருக்கு குருபார்வை தசம ஸ்தானத்தில் இருப்பதால் யோகமான பலன்களே கிடைக்கப் பெறும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும் மாதமாக இருக்கும். சுய சிந்தனை சில நேரங்களில் எதிர்மறையான சிந்தனையாகவே இருக்கும், தாயாரின் உடல் நலன் குறித்து கவலையுற்று இருப்பீர்கள்.

ராகு 5 ஆம் இடத்தில் இருப்பதால் பொய் சொல்லும்படியான சூழ்நிலை ஏற்படும். கடன் தொல்லைகள் குறையும், திடீர் பதவி உயர்வு கிடைக்கப் பெறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.