தனுசு ஜனவரி மாத ராசி பலன் 2023!

கடன்கள், உடல் நலக் குறைவு, சோதனைகள், ஏக்கங்கள், நிம்மதியின்மை என பல பிரச்சினைகளைக் கொடுத்த ஏழரைச் சனி முடிவடைவதால் ஜனவரி மாதம் மோசமான தாக்கத்தில் இருந்து மீளும் மாதமாக இருக்கும்.

4 ஆம் இடத்தில் புதன் பகவான், ஜென்மத்தில் குரு பகவான் உள்ளனர். வேலைவாய்ப்புரீதியாகவும், தொழில்ரீதியாகவும் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும். சுக்கிரனின் இடப் பெயர்ச்சி முன்னேற்றங்களுக்கு உங்களை இட்டுச் செல்லும்.

6 ஆம் இடத்தில் செவ்வாய், 5 ஆம் இடத்தில் ராகு, 11 ஆம் இடத்தில் கேது என கோள்களின் இட அமைவு உள்ளது. சூர்யன் 2 ஆம் இடத்திற்கு இடப் பெயர்ச்சி அடைவதால் அரசு வேலைக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு வாய்ப்புகள் அமையப் பெறும்.

திருமண காரியங்களைப்  பொறுத்தவரை ஏழரைச் சனி விலகுவதால் வரன் பார்க்கும் முயற்சியில் தீவிரமாகக் களம் இறங்குவீர்கள். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை பல ஆண்டுகள் பிரிந்த தம்பதியினர் மீண்டும் சேர்வார்கள்.

மாணவர்கள் கல்விரீதியாக கடந்த காலங்களில் பின் தங்கி இருந்தநிலையில் உங்களுக்கான வாய்ப்புகள் நேர்மறையானதாக இருக்கும். உடல் ரீதியாக இதுவரை செய்துவந்த விரயச் செலவுகளில் இருந்து மீண்டும் உடல் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

குடும்ப சுமை குறைந்து காணப்படும். எடுக்கும் முயற்சிகளில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews