தனுசு அதிசார கும்ப சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

உங்களுக்கு இந்த அதிசார சனி பெயர்ச்சி மூலமாக ஏழரை சனி விலகி விடுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக இருந்து வந்த மந்த நிலை / வேலையில்லா நிலை / நிரந்தரமான வருமானம் இல்லாத சூழ்நிலை போன்றவை இந்த வருடம் முடிவதற்குள் படிப்படியாக விலகி விடும்.

அரசு பணியில் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்துk கொண்டு வந்த பணிபுரிந்துk கொண்டு இருக்கும் தனுசு ராசி அன்பர்களுக்கு அனுபவத்துக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். இந்த வருடம் பிற்பாதியிலிருந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு அனைத்தும் கிடைக்கும்.

திருமணம் நடைபெறாத தனுசு ராசி அன்பர்களுக்கு திருமணம் நடைபெறும். திருமணமாகி பல்வேறு காரணங்களால் தனித்து வாழும் தனுசு ராசி அன்பர்கள் இந்த வருடம் மத்தியில் இருந்து சேர்ந்து வாழ ஆரம்பிப்பார்கள். பிரிந்து விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் படிப்படியாக இந்த வருடத்தில் மீண்டும் நட்பு பாராட்ட ஆரம்பிப்பார்கள் .

இந்த வருடம் முடிவதற்குள் நீங்கள் மூன்று கடல்கள் அல்லது மூன்று நதிகள் சேரும் இடத்தில் உங்களுடைய அப்பா வழி முன்னோர்களுக்கு திலா ஹோமம் செய்ய வேண்டும். ஒரு முறை இவ்வாறு செய்ய வேண்டும். இதன் மூலமாக உங்களுடைய அப்பாவின் முன்னோர்கள் என்ற பித்துருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தையின்மையால் வேதனைப்பட்டு கொண்டு இருந்த தம்பதிக்கு தம்பதிகளுக்கு இந்த வருடத்தில் மழலை செல்வம் கிடைக்கும்.

உங்களுடைய குழந்தைகள் பள்ளி அல்லது கல்லூரி படிப்பில் படித்துக் கொண்டிருந்தால் இந்த வருடத்தில் இருந்து சிறப்பான தேர்ச்சியை பெற ஆரம்பிப்பார்கள்.

இந்த வருடம் உங்களுக்கு மறுமலர்ச்சி தரும் வருடமாக இருக்கப் போகிறது. இந்த வருடம் முழுவதும் சிக்கனமாக இருக்க பழகவும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். இந்த வருடத்தில் சிறு சிறு உடல் உபாதைகள் வரும். அவ்வாறு வரும்போது பாரம்பரிய மருத்துவ முறையான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, நியூரோதெரபி போன்ற மருத்துவ முறைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.

பல தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த வருடத்தில் மகான்கள் மற்றும் துறவிகள் சந்திப்பு அவர்கள் மூலமாக மந்திர உபதேசம் மற்றும் தீட்சை கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் மந்திர உபதேசத்தை இந்த வருடம் முழுவதும் தினமும் ஜெபித்து வருவதன் மூலமாக வெகு விரைவில் அந்த மந்திரம் ஸித்தி அடையும். இதன் மூலமாக நீங்கள் உங்களுடைய அடுத்த கட்ட ஆன்மீக நிலைக்கு செல்ல முடியும்.

சிவராஜ யோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
+919629439499
ராஜபாளையம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews