தனுசு ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

தனுசு ராசியினைப் பொறுத்தவரை குரு பகவான் – சூர்ய பகவான் – புதன் பகவான் என அனைவரும் கூட்டணி அமைக்கின்றனர். செவ்வாய் பகவான் 7ஆம் இடத்தில் உள்ளார். சுக்கிரன் 6 ஆம் இடத்தில் உள்ளார். 3ஆம் இடத்தில் சனி பகவான் உள்ளார்.

பல ஆண்டுகளாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேலை மாற்றம், பதவி உயர்வு கிடைக்கப் பெறும். சுக்கிரனின் இட அமர்வு திடீர் ராஜயோகத்தினைக் கொடுக்கும், வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நினைத்ததை நடத்தும் மாதமாக இருக்கும். உங்களின் இலக்கை நோக்கிப் பயணித்த நீங்கள் தற்போது அதனை அடையப் போகிறீர்கள்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே இருந்த கசப்பான உணர்வுகள் சரியாகும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை இதுவரை தடங்கல்கள், தாமதங்களைச் சந்தித்த நிலையில் அனைத்தும் கைகூடும் காலமாக இருக்கும்.

பிரிந்த உறவினர்கள் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சேர்வர். நண்பர்களுடனான பகை மீண்டும் நட்பாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் சரியாகும். அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தியாகும், மேலும் உங்களுக்கு எதிர்பாராத நபர்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் கிடைக்கும்.

இதுவரை தயங்கித் தயங்கி பல விஷயங்களையும் செய்து வந்தநிலையில் இனி தைரியத்துடனும் தெளிவான சிந்தனையுடனும் எந்தவொரு விஷயத்தையும் செய்வீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews