தனுசு ஐப்பசி மாத ராசி பலன் 2022!

இராசியில் இருந்து 4 ஆம் இடத்தில் குரு பகவான் உள்ளார். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வி ரீதியாக சிறந்த மதிப்பெண் பெறுவர்.

நினைத்தது கைகூடும் மாதமாக இருக்கும், இராசிக்கு 2 ஆம் இடத்தில் சனி பகவான் ஆட்சி பலத்துடன் உள்ளார். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சரியாகி நன்மை பெறுவீர்கள்.

ஆரோக்கியம்ரீதியாக இருந்த பிரச்சினைகளும் சரியாகும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடனான உறவு மேம்படும். ராசிக்கு 5 ஆம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால் குழந்தைகள் உடல் நலனில் மேம்பட்டு இருப்பர்.

ராசிக்கு 6 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் வேலைவாய்ப்புரீதியாக முன்னேற்றத்தைக் கொடுப்பார். புதிதாக வேலைக்கு முயற்சிப்போருக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்.

ராசிக்கு 7 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் கணவன் – மனைவி இடையேயான உறவில் பிரச்சினைகள் ஏற்படும். மனைவிரீதியாக விரயச் செலவுகள் ஏற்படும்.

தந்தையால் பண வரவு இருக்கும், தொழில்துறை ரீதியாக முன்னேற்றம் இருக்கும். ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வருதல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews