தனுசு ஆவணி மாத ராசி பலன் 2022!

ஏற்றத்துக்கு உண்டான காலகட்டமாக இருக்கும், மன மகிழ்ச்சியினைக் கொடுக்கும் நற் செய்திகள் உங்களைத் தேடி வரும். ஆடி மாதத்தில் படாத பாடு பட்டு இருப்பீர்கள், அவை அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி உங்கள் வீட்டு வாசலில் எட்டிப் பார்க்கும் காலகட்டம் இது.

தொழில்ரீதியான மற்றும் உத்தியோகம் ரீதியான டென்சன்கள் என அனைத்தையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும், நீங்கள் திறமையுடன் செயல்பட்டு பிரச்சினையில் இருந்து மீள்வீர்கள்.

தெய்வ தரிசனங்கள் ரீதியாக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். விஷ்ணு வழிபாடு செய்தல் விஷ்ணு ஸ்லோகங்கள் சொல்லுதல் அனுகூலங்களை ஏற்படுத்தும்.

அஜீரணக் கோளாறுகள், வயிறு சார்ந்த உபாதைகள் ஏற்படும். உத்தியோகம் ரீதியாக மேல் அதிகாரிகளால் படாதபாடு பட்டு இருப்பீர்கள், அவை அனைத்தும் நீங்கும் காலகட்டமாக இருக்கும்.

எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு ஏற்படும். பதவி உயர்வு, வேலை ரீதியாக இடமாற்றம் என நினைத்த காரியங்கள் ஈடேறும் மாதமாக இருக்கும். சுப காரியங்கள் நீங்கள் நினைத்தமாதிரியே ஈடேறும். குடும்பத்தில் இருக்கும் பெரியோர்களுடன் வாக்கு வாதங்கள் வேண்டாம்.

மனதில் இருக்கும் பாரங்கள் குறைந்து லேசாக உணர்வீர்கள். பயம் இல்லாமல் நிம்மதியுடன் இருப்பீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின் குடும்பத்தில் கௌரவம் ஏற்படும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment