தனுசு ஆவணி மாத ராசி பலன் 2018!

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் முயற்சியால் வெற்றி கிடைக்கும் மாதமாக இருக்கும். இந்த ஆவணி மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிரகங்கள் சுமாரான பலன்களை கொடுக்கும். ஜென்ம ராசியில் சனி பகவான் இருப்பதால் நினைத்த காரியம் உரிய நேரத்திற்கு முடிவடையாமல் இழுபறியாக செல்லும்.

ஆகஸ்ட் 28-ம் தேதி வரை புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் எடுக்கின்ற முயற்சியால் வெற்றி கிடைக்கும். ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சுக்கிரன் சாதகமான வீடுகளில் இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.

பதினோராம் இடத்தில் இருக்கும் குரு சாதகமான பலன்களை கொடுப்பார். சொந்த பந்த வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். ஆகஸ்ட் 28-ம் தேதிக்குப் பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலமாக இருக்கப் போகின்றது. வீண் விவாதங்களை தவிர்த்திடுங்கள். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் ஒரு முறைக்கு பல முறை முயற்சி செய்த பிறகே அமையக்கூடும்.

குறிப்பாக மூலம் நட்சத்திரம், பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்காலத்தை பற்றி பயம், மனக்கவலை இருந்து கொண்டே இருக்கும். சனி இப்பொழுது மூலம் நட்சத்திரம் செல்வதால் செய்கின்ற பணிகளில் சற்று தடுமாற்றம் உருவாகலாம். பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், பணவரவு சீராக வரக்கூடும்.

பணியிடத்தில் உங்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் சம்பவங்கள் நடைபெறும் என்பதால் நிதானமாக செயல்படுங்கள். யாரையும் முழுவதுமாக நம்பி செயலில் இறங்க வேண்டாம். மாத பிற்பகுதியில் உங்கள் திறமை பளிச்சிடும். ஒரு சிலருக்கு திடீர் இடமாற்றம், வெளியூர் பயணம் ஏற்படும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment