தனுசு ஆடி மாத ராசி பலன் 2022!

முன்னோர்களின் அனுகிரகம் கிடைக்கப் பெறும். பூர்விக சொத்துகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும், மேலும் பூர்விக வீடு அல்லது மனையினை விற்று புதிதாக வீடு, மனை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.

சூரியன் – புதன் இணைவு உடல் ரீதியான பிரச்சினைகள் சந்திப்பீர்கள், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெகுதூரப் பயணங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கு ஏற்ற காலமாக இல்லை.

தொழில் ரீதியாக அபிவிருத்தி செய்யும் திட்டங்களை தள்ளி வைத்தல் வேண்டும். கடன் ரீதியான நெருக்கடி நிலைமைக்கு ஆளாவீர்கள். நீண்ட கால நட்பில் விரிசல் ஏற்படும்.

தொடர் தோல்விகளால் மன உளைச்சல், தொய்வுற்று காணப்படுவீர்கள். தைரியமான நபரான நீங்கள் நிதானமாகச் செயல்பட்டால்மட்டுமே நெருக்கடியான காலகட்டத்தினை சிறப்பான முறையில் கடக்க இயலும்.

தந்தை வழி உறவுகளால் பிரச்சினைகள் ஏற்படும், வார்த்தைகளில் கவனம் தேவை. கணவன்- மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும், குழந்தைகள் கல்வியில் சிறப்பான முன்ன்னேற்றம் அடைந்து காணப்படுவார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.