Connect with us

தனுசு ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

Rasipalan

தனுசு ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள தனுசு ராசிக்காரர்களே, இந்த ஆடி மாதம் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கின்ற மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசி அதிபதி குரு பகவான் வக்ர நிவர்த்தியாகி 11-ம் இடத்தில் இருப்பதால் மாதம் முழுவதும் நற்பலன்களைக் கொடுப்பார். நினைத்தது நிறைவேறும். புதன் சாதகமாக இருப்பதால் செய்கின்ற முயற்சிகளில் வெற்றி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

உங்கள் ராசியின் மூன்றாம் இடத்தை குரு பார்ப்பதால் எதையும் சமாளிக்கும் திறன், தைரியம் உண்டாகும்.சகோதிரிகளால் நன்மைகள் உண்டாகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதமாக முடிவடையும். ஆகஸ்ட் 2-ம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபார வளர்ச்சி மேம்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

ஜென்ம சனி வக்ர இயக்கத்தில் தொடர்வதால் துணிந்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். பல வேலைகள் முடிவடையாமல் அப்படியே இருக்கக்கூடும். வேலைப்பளு அதிகரிக்கும். யாருடைய பேச்சை கேட்டும் அவசரப்பட்டு முதலீடு செய்யாதீர்கள். எதை செய்தாலும் ஒரு முறைக்கு பல முறை தீர யோசித்த பிறகே செயலில் ஈடுபடுங்கள்.

தனுசு ராசியினருக்கு குரு பகவானால் பணவரவு அதிகரிக்கும். உங்கள் ராசியில் வக்ர இயக்கத்தில் உச்சம் பெற்ற செவ்வாய் கேதுவுடன் இணைந்து இருப்பதால் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சூரியன், ராகு எட்டாம் இடத்தில்  இருப்பதால் ஆடி அமாவாசை அன்று முன்னோர்களை வழிபட்டால் தடைகள் நீங்கி இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top