Connect with us

தனுஷின் வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

thanu vaa

பொழுதுபோக்கு

தனுஷின் வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. அதை தொடர்ந்து இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்துள்ள தனுஷ்,தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு பதிப்பிற்கு ‘சார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

1d622b3175e7c7e2c9ab452ec18a18a81658751378 original

தனுஷ் ஆசிரியராக நடித்திருப்பதால் தயாரிப்பாளர்கள் ‘வாத்தி’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர், மேலும் படம் 1980 களில் உருவாகிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வாத்தி படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ,டீசர் தனுஷின் பிறந்தநாள் தேதியில் வெளியாகி ரசிகர்களின் மனதில் வெகுவாக கவர்ந்து உள்ளது.

FotoJet 39

இந்நிலையில், இப்படம் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.படக்குழுவின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன்பே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

unnamed 23

ஹேர் ஸ்டைல மட்டும் இல்ல பிட்னெஸிலும் விஜய்க்கு டஃப் கொடுக்கும் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி… வைரல் போட்டோஸ் !

மாதத்திற்கு ஒன்று என தனுஷின் படத்தின் அப்டேட் வருவதால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top