Connect with us

தனுஷின் வாத்தி படம் ரிலீஸ் குறித்து வெளியான சர்ப்ரைஸ் நியூஸ் !

1736828 1

பொழுதுபோக்கு

தனுஷின் வாத்தி படம் ரிலீஸ் குறித்து வெளியான சர்ப்ரைஸ் நியூஸ் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் , தற்போது நானே வருவேன் , வாத்தி போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்து திரையில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

அதை தொடர்ந்து இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்துள்ள தனுஷ்,தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு பதிப்பிற்கு ‘சார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

dhanush in vaathi movie first look and teaser announcement 1658749104

தனுஷ் ஆசிரியராக நடித்திருப்பதால் தயாரிப்பாளர்கள் ‘வாத்தி’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர், மேலும் படம் 1980 களில் உருவாகிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வாத்தி படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ,டீசர் தனுஷின் பிறந்தநாள் தேதியில் வெளியாகி ரசிகர்களின் மனதில் வெகுவாக கவர்ந்து உள்ளது.

maxresdefault 58 1

சினிமாவை தவிர தற்காப்பிலும் ஆர்வம் காட்டும் சமந்தா! அப்படி என்ன கத்துக்குறாங்க ?

இந்நிலையில், இப்படம் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.படக்குழுவின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாதத்திற்கு ஒன்று என தனுஷின் படத்தின் அப்டேட் வருவதால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top