செல்வராகவன் இயக்கத்தில் உருவான நானே வருவேன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாத்தி’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் படத்தினை சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் வா வாத்தி என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியானது.
ரொமான்டிக்காக தொடங்கிய பாடல் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் படி, யூடியூப்பில் 1 லட்சம் ரீல்ஸ் கடந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
மேலும், இப்படம் வருகின்ற 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.