
பொழுதுபோக்கு
தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் 4 வது சிங்கிள் வீடியோ வைரல்!
தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் தாய் கிழவி, மேகம் கருக்காதா வெளியான நிலையில் லைஃப் ஆஃப் பழம்’ என்ற மூன்றாவது சிங்கிள் பாடல் தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. வெளியான அனைத்து பாடல்களும் சமூக வலை தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷும், அனிருத்தும் நேரலையில் கலந்து கொண்டனர்.7 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்களான இருவரும் மீண்டும் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் 68வது படத்தின் இயக்குனர் யாரு தெரியுமா? மாஸான தகவல் இதோ!
இந்நிலையில் இந்த படத்தின் தேன்மொழி என்னும் பாடல் வெளியாகி உள்ளது. சந்தோஷ் நாராயணன் பாடியுள்ள இந்த பாடலுக்கு தனுஷ் வரிகள் இயற்றியுள்ளார். பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பாடல் வீடியோ இதோ….
#Thiruchitrambalam 4th single #Thenmozhi Lyric video is out now
▶️ https://t.co/Bn3WiaMUcD@dhanushkraja @anirudhofficial@Music_Santhosh #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @silvastunt @omdop @editor_prasanna @jacki_art
— Sun Pictures (@sunpictures) August 1, 2022
