Connect with us

தனுஷின் திருச்சிற்றம்பலத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த 3 நடிகையா ? லிஸ்ட் இதோ !

thdd 1

பொழுதுபோக்கு

தனுஷின் திருச்சிற்றம்பலத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த 3 நடிகையா ? லிஸ்ட் இதோ !

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நான்காவது முறையாக நடிகர் தனுஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த படத்தில் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதைப்படக்குழு அறிவித்தது .

இந்தப் படம் வெளியாகி தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. திருச்சிற்றம்பலம் திரைப்படம் மூன்று நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி திருச்சிற்றம்பலம் திரைப்படம் 30 கோடி வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. உலக அளவில் 50 கோடி அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.

New video song from Dhanush s Thiruchitrambalam do not miss 1659340102

இந்த படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தில் நித்யா மேனன் நடித்த ஷோபனா கதாபாத்திரம் தனுசுடன் இணைந்து ஈர்க்கக் கூடியதாக உள்ளது.பிரியா பவானி சங்கர்,ராசி கண்ணா இருவருமே தனக்கு கொடுத்த இடத்தில் சரியாக நடித்திருப்பார்கள்.

படத்தில் இந்த 3 ஹீரோயின்களும் கடைசி நேரத்தில் வேகமாக தேர்ந்தெடுக்க ப்பட்டவர்கள் .முதலில் இவர்களுக்கு பதில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அவர் திரும்ப வந்துவிட்டார் – வயதான கமல் ! இந்தியன்-2 மாஸ் அப்டேட் !

new project 2022 08 23t074708 487

 

நித்யா மேனன் நடித்த ஷோபனா கேரக்டரில் நடிகை நயன்தாராவையும், ராஷி கண்ணா கதாபாத்திரத்தில் ஹன்சிகாவையும், பிரியா பவானி சங்கர் கேரக்டரில் சமந்தாவையும் நடிக்க வைக்க திட்டமிடபட்டிருந்தது .நித்யா மேனன் நடித்த ஷோபனா கேரக்டர் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருந்ததால் அதில் நயன்தாரா நடித்திருந்தால் அது அவருக்கு செட் ஆகி இருக்காது என்றும் ரசிகர்கள் கருத்து.

வேகமாக எடுத்த முடிவு இறுதியில் வெற்றி முடியாக மாறியது திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை குறிக்கிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top