Connect with us

திருச்சிற்றம்பலம் படத்துக்கு தனுஷின் சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா ?

NTLRG 20220815115040811454 1

பொழுதுபோக்கு

திருச்சிற்றம்பலம் படத்துக்கு தனுஷின் சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா ?

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நான்காவது முறையாக நடிகர் தனுஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திருச்சி ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை (ஜூலை 30) மாலை பிரம்மாண்டமாக நடத்தபட்டது.இந்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷும், அனிருத்தும் நேரலையில் கலந்து கொண்டனர்.

thiru 1

திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார்.தற்போழுது படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதைப்படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் தனுஷ் தற்போழுது ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியாக நடித்து வருகிறார்.சமீபத்தில் தனுஷ் நடிப்பில் நேரடியாக ஓடிடி வெளியான ஜகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் அவரது கெரியரில் மிகப்பெரிய தோல்விப் படங்களாக அமைந்தன.

maxresdefault 1632920503 1657894465 1

இந்நிலையில், நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்துக்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிக்க தனுஷ் ரூ.15 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம். முன்னதாக ஒரு படத்துக்கு ரூ.25 முதல் ரூ.30 கோடி வரை வாங்கியுள்ளார்.

ரஜினி, கமலுடன் இணையும் முதல்வர் ! பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவிற்கு வருகை!

ரஜினிகாந்த், விஜய் என முன்னணி நடிகர்கள் 100 கோடி சம்பளத்தை கடந்த நிலையில், தனுஷ் இன்னமும் 15 கோடி தான் வாங்குகிறாரா எனும் தகவல் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளது .

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top