தனுஷின் நானே வருவேன் பாடத்தின் முதல் ட்விட்டர் விமர்சனம் இதோ !

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படம் செப்டம்பர் 29, 2022 இன்று திரைக்கு வர உள்ளது. கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், திரில்லர் படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’.

படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழுடன் அனுமதி வழங்கியுள்ளது.இப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இடைவேளைக்குப் பிறகு செல்வராகவனுடன் மீண்டும் இணைகிறார். சுவாரஸ்யமாக, படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் மற்றும் செல்வராகவன் தனுஷுடன் ஒரு முக்கிய பாத்திரத்தில் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

63189d3e66a9e

நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் இணைந்த படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், செல்வராகவன், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் அறிமுகமாகிறார். படத்தின் கதைக்களம் காட்டுக்குள் வசிக்கும் வேடனாக ஒரு தனுசும், அந்த காட்டுக்கு ஒரு பணி நிமித்தமாக குடும்பத்துடன் செல்லும் என்ஜினீயராக ஒரு தனுசும் தோன்றுகிறார்கள். இருவருக்கும் ஏதோ ஒரு அமானுஷ்ய தொடர்போ, அல்லது பூர்வஜென்ம பந்தமோ இருப்பதாக கதைக்களம் நகர்கிறது.

அதுக்குள்ளே டிக்கெட் காலியா? புக்கிங்கில் சாதனை படைத்த பொன்னியின் செல்வன்!

படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ. 25 கோடிக்கு அமேசான் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை ரூ. 18 கோடிக்கும் சன் டிவியும் வாங்கியுள்ளது.

படம் வெளியான காலை காட்சிகளில் படம் குறித்து நல்ல வரவேற்புகள் வந்த வண்ணம் உள்ளது

 

 

https://twitter.com/ChaitraReddyOff/status/1575338762842034176?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1575338762842034176%7Ctwgr%5E2b31c25898cd9c5ff6b5cd2b9cfc4f2d9f80d675%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fkalakkalcinema.com%2Fnaane-varuven-movie-twitter-review%2F199194%2F

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment