தனுஷின் ‘மேகம் கருக்காதா’ மேக்கிங் வீடியோ ! மகிழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டர் ஜானி..

தனுஷ் நடிப்ப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக உலகம் முழுவதும் 100 கோடிகளை கடந்துள்ளது. மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கிய, காதல் கலந்த நகைச்சுவை-நாடகப் படம் இந்த பாக்ஸ் ஆபிஸ் மைல்கல்லை எட்டிய முதல் படமாக தனுஷுக்கு கிடைத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் தயாரித்த திருச்சிற்றம்பலம் மிகவும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, அதே நேரத்தில் பார்வையாளர்களின் வாய் வார்த்தையும் மிகவும் வலுவானது.

download 2022 09 28T135112.075

இந்த படத்தில் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதைப்படக்குழு அறிவித்தது .அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட்டாகியுள்ளது.படத்தில் நித்யா மேனன் நடித்த ஷோபனா கதாபாத்திரம் தனுசுடன் இணைந்து ஈர்க்கக் கூடியதாக உள்ளது.

சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் செப்டம்பர் 23 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் மேகம் கருக்காதா’ பாடல் பெரிய ஹிட்டானது.இந்தப் பாடலின் நடன அமைப்பும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து ட்விட்டர், இன்ஸ்டா என ரசிகர்கள் பலரும் நடனமாடி வீடியோ ரீச் செய்தனர்

1664251467940

நவராத்திரி ஸ்பெஷலாக கொலு பொம்மை போல மாறிய அழகாக அதிதி! கண்ணை கவரும் புகைப்படங்கள்!

தற்போது இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த மேக்கிங் வீடியோவை டான்ஸ் மாஸ்டர் ஜானி ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment