Connect with us

தனுஷின் ‘மாறன்’: ஃபர்ஸ்லுக் போஸ்டர் ரிலீஸ்!

Entertainment

தனுஷின் ‘மாறன்’: ஃபர்ஸ்லுக் போஸ்டர் ரிலீஸ்!

763390e2083552e12bac92441ed68531

தனுஷ் நடித்து வரும் 43வது திரைப்படத்திற்கு ‘மாறன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனதையடுத்து இந்த டைட்டில் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது 

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய டைட்டிலுடன் கூடிய போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி சற்றுமுன் இந்த போஸ்டர் வெளியானது. இதில் ‘மாறன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கண்ணாடியை உடைத்து தனுஷின் அட்டகாசமான போஸ்டர் ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஜீவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் சூப்பராக வந்துள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் இந்த ஆண்டு டிசம்பரில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top