OTT-யில் ரிலீஸாகிறதா தனுஷின் ஜகமே தந்திரம்

8af3be8dff90dc479235464945102bf5

நடிகர் தனுஷின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாகிய ‘ஜகமே தந்திரம்’ OTT-யில் ரிலீஸாக இருக்கிறது என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Ynot ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் தனுஷின் பிறந்த நாளின் போது வெளியான ‘ரக்கிட ரக்கிட’ பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த  ஜகமே தந்திரம் படம் கடந்த வருடமே ரிலீசாக வேண்டியது. படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

மேலும் முன்னதாக ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று செய்திகள் வைரலானது. எனினும் ‘மாஸ்டர்’ படம் தியேட்டர்களில் வெளியான பொழுது நடிகர் தனுஷும் அதை ஆதரித்திரிக்க ரசிகர்கள் பலரும் ஜகமே தந்திரம் படமும் தியேட்டரில் தான் ரிலீஸாகும் என்று நினைத்திருந்தனர். இந்நிலையில் ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் தளத்தில், வரும் மார்ச் மாதம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.