Connect with us

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’.. யார் அந்த கேப்டன் மில்லர் கதை களம்?

newproject77 1650034904

பொழுதுபோக்கு

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’.. யார் அந்த கேப்டன் மில்லர் கதை களம்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் . இவர் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம் , வாத்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்த ஹாலிவுட் திரைப்படமான ‘தி கிரே மேன்’ படம் வருகிற 15-ம் தேதி குறிப்பிட்ட சில திரையரங்குகளிலும், ஜூலை 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்திலும் வெளியாகிறது.

மேலும் திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியாகிறது.மேலும் இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை, சாணி காகிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை இயக்கியுள்ளார்.

download 2022 07 03T073233.972

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ‘கேப்டன் மில்லர்’ என்று பெயரிடப்பட்டு இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப்படம் 1930-கள் மற்றும் 40-களில் மெட்ராஸ் பிரசிடென்சியை மையமாக வைத்து கதைக்களம் அமைகிறது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன்,இந்தக் கதை 18 வயதிற்கு மேற்பட்ட பார்வையாளர்களுக்கான படம், ஆக்‌ஷன் அதிகம் இருக்கும் என்பதால், இது யு/ஏ படமாக இருக்கும் . உண்மையில், இரண்டாம் பாதியில் போர் காட்சிகள் இருக்கும். கதையில் ஆக்‌ஷன் மற்றும் வெவ்வேறான உணர்ச்சிகள் காட்டக்கூடிய சம்பவங்கள்
இடம் பெற்றுள்ளது.

குறிப்பாக கேப்டன் மில்லராக தனுஷ் நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் இரண்டு பெயர்கள் கூட உள்ளன. படத்தில் மூன்றுவிதமான தோற்றங்களில் தனுஷ் நடிகையுள்ளார். ‘பரதேசி’ படத்திற்கு தேசிய விருது பெற்ற பூர்ணிமா ராமசாமி, இந்தப்படத்தின் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற உள்ளார்.

இந்த படத்தை பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக ‘புஷ்பா’, கே.ஜி.எஃப்’ போன்று தயாரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

கேப்டன் மில்லர் என்ற வார்த்தை கேட்டதும் நமக்கு இரண்டு பெயர்கள் நினைவி வரும். ஒன்று விடுதலை புலிகள் அமைப்பு மற்றொன்று ஹாலிவுட் படத்தின் கதாபாத்திரம்.

images 2022 07 03T073152.579

எல்.டி.டி.இ கேப்டன் மில்லர்

எல்.டி.டி.இ அமைப்பைச் சேர்ந்தவர் வல்லிபுரம் வசந்தன் ,240 கரும்புலிகளில் மில்லர் முதலாவது கரும்புலியாகவும், புலிகளின் முதலாவது தற்கொடைப் போராளி என பாராட்ட படுப்பவர். 1987 ஆம் ஆண்டு நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் மரணமடைந்தார்.

தற்போது படக்குழு வெளியிடப்பட்டுள்ள மோஷன் போஸ்டரில் உள்ள முகம் இவரை போலவே உள்ளது. இதனால், இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகள் இடையிலான சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.

 

கேப்டன் மில்லர் கதாபாத்திரம்:

கேப்டன் மில்லர் 1998 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான சேவிங் பிரைவேட் ரியான் படத்தில் வரும் கதாபாத்திரம். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் நடைபெறும் ஒரு படம் தான் இது. போர் முனையில் சிக்கியவரை காப்பாற்றி அவரது தாயிடம் ஒப்படைக்கும் சாகச கதாபாத்திரம் .

download 2022 07 03T073538.949

அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் ‘ஜவான்’ படம் .. ஓடிடியில் இத்தனை கோடிக்கு விற்பனையா?

இந்த இரண்டு நிகழ்வுகளை தழுவி புதிய கதை ஒன்றினை இயக்குநர் உருவாக்கி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மோஷன் போஸ்டரை பார்க்கும் போது இது ஒரு மாஸ் ஹீரோ செண்ட்ரிக் படமாக இதனை உருவாக்க வாய்ப்புள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top