
பொழுதுபோக்கு
தெறிக்கவிடும் தனுஷின் கேப்டன் மில்லர் பார்ட்ஸ் லுக்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் . இவர் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம் , வாத்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே சாணி காகிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது 1930கள் சார்ந்த கதைக்களமாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதேசமயம் 1930-கள் சார்ந்த கதையில் தனுஷ் நடித்திருப்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பது வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த படமானது பான் இந்தியா படமாக உருவாகிறது.
இதனைதொடர்ந்து படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள், படக்குழு குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என கூறுகின்றனர். இந்த சூழலில் தற்போது கேப்டன் மில்லர் பார்ட்ஸ் லுக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில் தனுஷ் முகத்தை துணியால் கட்டியபடி தனது கேங்குடன் பைக்கில் வருவது போன்று வெளியாகும் இந்த பார்ட்ஸ் லுக் வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
We are very elated to present #CaptainMiller with the indomitable star @dhanushkraja 💫
This will be a very exciting film DIRECTED by the young & maverick @ArunMatheswaran 🔥🤗
A @gvprakash Musical 🥁 pic.twitter.com/FKX2iPL1yr
— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 2, 2022
