Connect with us

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் இணைந்த பிரபலங்கள் ! வேறலெவல் அப்டேட் !

1651299944Dhanush s Captain Miller director Arun Matheswaran shares breaking details about the film ogimg

பொழுதுபோக்கு

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் இணைந்த பிரபலங்கள் ! வேறலெவல் அப்டேட் !

தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் முன்னணி நடிகர் தனுஷ் . இவர் தற்போது நானே வருவேன்,கேப்டன் மில்லர்,வாத்தி போன்ற படங்களில் கமிட்டாக்கியுள்ளார் . அதை தொடர்ந்து வட சென்னை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

மேலும் வாத்தி மற்றும் நானே வருவேன் ஆகிய படங்கள் இறுதி கட்ட ஷூட்டிங் நடந்து புரோமோஸனுக்கு தயாராகயுள்ளது சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை படைத்துள்ளது.இப்படம் தமிழகத்தில் ₹100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது தனுஷின் கேரியரில் மிகப்பெரிய சாதனைபடைத்தது.

captain miller1

இந்நிலையில் தனுஷ் அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்க உள்ளார் .சாணி காகிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது 1930கள் சார்ந்த கதைக்களமாகும். இந்த படமானது பான் இந்தியா படமாக உருவாகிறது.சமீபத்தில் கேப்டன் மில்லர் பார்ட்ஸ் லுக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்த படத்திற்கு தனுஷ் தனது சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தியதால் படப்பிடிப்பு குறித்து எந்த தகவலும் வராமல் இருந்தது, தற்போழுது மாஸான தகவல் வெளியாகியுள்ளது, கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Capture 4 1 1

மகிழ்ச்சி ஆர்பாட்டத்தில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு ! தெறிக்க விடும் விமர்சனங்கள் !

படத்தின் படப்பிடிப்பு முதலில் தென்காசியில் தொடங்க உள்ளதாகவும் அங்குள்ள வனப்பகுதியில் முதல் சேடூலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் Sumesh Moor மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்தித்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் பூஜை வரும் 21-ஆம் தேதி நடக்க உள்ளதாகவும், அப்போது இப்படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்து தகவல் கள் வெளியாகலாம் .

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top