தேசிய விருது இசையமைப்பாளருடன் இணையும் தனுஷ் : அதிரப்போகும் திரையரங்கம்: வெளியான மாஸ் அப்டேட்

சினிமாவில் அதிரடி மற்றம் குத்தாட்டப் பாடல்களுக்கு இவரை விட்ட வேற ஆளே என்னும் அளவிற்கு கொடிகட்டிப் பறப்பவர்தான் தேவிஸ்ரீ பிரசாத். மெலடி பாடல்களில் கூட அதிரும் இசையை கொடுத்து இளசுகளை VIBE MODE-ல் வைத்திருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத்.

1997-ல் இசை ஆல்பங்கள் மூலம் இசைப்பயணத்தை தொடர்ந்த தேவி ஸ்ரீ பிரசாத் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழில் பத்ரி திரைப்படம் மூலம் அறிமுகமானார். பத்ரி திரைப்படத்தில் வரும் WORK OUT பாடல் இன்றும் சிறந்த ஒரு MOTIVATION பாடலாக உள்ளது. தற்போது இவர் தனுஷ் உடன் மீண்டும் கூட்டணி சேர உள்ளார்.

கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் தனுஷ் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டார். கேப்டன் மில்லர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதனையடுத்து தனுஷ் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக தனது அடுத்த படத்தை தயாரித்து இயக்க உள்ளார். இது அவருடைய 50-வது படமாகும்.

இரு படங்களையும் முடித்த பின் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கப் போகும் தனுஷ் 51 படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஒப்பந்தமாகி உள்ளார்.

சிம்டாங்காரன் முதல் பொன்னி நதி வரை : யார் இந்த பம்பா பாக்யா? ஏ.ஆர்.ரஹ்மான் இவரை பாட வைத்த காரணம் இதுதானா..!

ஏற்கனவே இவர்களது காம்போவில் ஹரி இயக்கத்தில் 2011-ல் வெளியான வேங்கை திரைப்பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. என்ன சொல்ல போற நீ எப்ப சொல்ல போற என்ற பாடலை பாடியும் இசையமைத்தும் அன்றைய கால கட்ட இளைஞர்களின் காதல் ரிங்டோனாக மாற்றியவர் தேவி ஸ்ரீ பிரசாத். மேலும் குட்டி படத்தில் வெளியான கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம், யாரோ என் நெஞ்சைத் தீண்டியது போன்ற பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தன.

Devi sri Prasad

இதனையடுத்து மீண்டும் இவ்விருவரும் சேரும் கூட்டணியில் உருவாகும் பாடல்களை இசை ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். தனுஷ் நடிப்பு  மட்டுமல்லாது இயக்கம், பாடல், பின்னணி பாடுவது என அனைத்திலும் கலக்கி வருவதால் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் எழுதியும், பாடவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அண்மையில் புஷ்பா தி ரைஸ் படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் சிறந்த இசைஅமைப்பிற்கான தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கில் ஆஸ்கர் நாயகன் கீரவாணி உள்ளிட்ட அதிக சம்பளம் வாங்கும் முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலிலும் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளார் என்பது பலருக்கும் தெரியாத தகவல்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews