தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் . இவர் தற்போது நானே வருவேன்,கேப்டன் மில்லர்,வாத்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து வட சென்னை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார். மேலும் வாத்தி மற்றும் நானே வருவேன் ஆகிய படங்கள் இறுதி கட்ட ஷூட்டிங் நடந்து புரோமோஸனுக்கு தயாராகயுள்ளது .
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை படைத்துள்ளது. வர்த்தக ஆதாரங்களின்படி, இப்படம் தனுஷின் கர்ணனின் வாழ்நாள் வருவாயை முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மித்ரன் இயக்கத்தில் இந்தப் படத்தில் தனுஷ் ஃபுட் டெலிவரி பையனாக நடிக்கிறார். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் எதிர்பார்க்காத வெற்றியை தொடர்ந்து தனுஷின் அடுத்தடுத்த வரவிருக்கும் படங்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படம் தமிழகத்தில் ₹100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது தனுஷின் கேரியரில் மிகப்பெரிய வசூல் செய்த படமாக திருச்சிற்றம்பலம் உருவெடுத்துள்ளது. இந்த மாதம் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷின் நானே வருவேன் படம் வெளியாக உள்ளது . இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. அடுத்ததாக வாத்தி படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனுஷ் அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்க உள்ளார் .சாணி காகிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது 1930கள் சார்ந்த கதைக்களமாகும். இந்த படமானது பான் இந்தியா படமாக உருவாகிறது.
உதட்டை குளோஸாக படமெடுத்த நயன்தாரா! விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ..!
இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. இதற்கு காரணம் தனுஷ் தான், தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்திற்காக ரூ.15 கோடி சம்பளமாக வாங்கி படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் தற்போது சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திஉள்ளார். தனுஷ் ரூ.30 கோடி சம்பளம் கேட்பதால் அப்படத்தின் ஷூட்டிங் தாமதமாவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.