
பொழுதுபோக்கு
தனுஷின் வாத்தி ஃபர்ஸ்ட் லுக் ! நாளை பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் டீசர்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் , தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம் , வாத்தி போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘தி கிரே மேன்’ படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது.
இந்நிலையில், நாளை ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் அன்று தனுஷ் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பாத்து காத்துள்ளனர்.
தற்போழுது தனுஷ் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சித்தரும் தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்துள்ள தனுஷ்,தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு பதிப்பிற்கு ‘சார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தனுஷ் ஆசிரியராக நடித்திருப்பதால் தயாரிப்பாளர்கள் ‘வாத்தி’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர், மேலும் படம் 1980 களில் உருவாகிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் கன்னியாக மாறிய திவ்யா பாரதி! – பிகினியில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
