தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக இருக்கும் தனுஷின் 43வது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இன்றைய படப்பிடிப்பில் ஜீவி பிரகாஷ் கம்போஸ் செய்த பாடலின் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும், ஒரு வாரத்திற்குப் பின்னர் அதிரடி ஆக்ஷன் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது
தனுஷ் ஜோடியாக ‘மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் நடிக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக 30 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் சற்று முன் தனுஷ் தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இந்த படத்தின் டைட்டில் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் டைட்டில் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் முறைப்படி தயாரிப்பு நிறுவனம் டைட்டிலை அறிவிக்கும் என்றும் தனுஷ் கூறியிருப்பதை அடுத்து வரும் பொங்கல் தினத்தில் இந்த படத்தின் டைட்டில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது