Connect with us

18 வருடத்திற்கு பிறகு மோதலுக்கு தயாராகிய முன்னணி ஹீரோக்கள்!! எந்தந்த படம் தெரியுமா?

10 vijay simbu dhanush

பொழுதுபோக்கு

18 வருடத்திற்கு பிறகு மோதலுக்கு தயாராகிய முன்னணி ஹீரோக்கள்!! எந்தந்த படம் தெரியுமா?

யாரடி நீ மோகினி,, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் இயக்கத்தில் நான்காவது முறையாக நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படம்.

இந்தப்படத்திற்க்காக சிம்பு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து 17 வயது சிறுவன் போல காட்சி அளித்தார்.இப்படத்தில் சிம்பு ஐந்து விதமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

simbu 1

இந்நிலையில், சிம்புவின் வெந்து தணிந்தது காடு மற்றும் தனுஷ் திருச்சிற்றம்பலம் படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2004 ஆண்டு இதே போல தீபாவளி தினத்தில் தனுஷ் மற்றும் சிம்புவின் படங்கள் ஒரே நாளில் வெளியானது,அதில் நடிகர் தனுஷ் ட்ரீம் படம் மற்றும் சிம்புவுக்கு மன்மதன் என வெளியாகியது.. இதில் மன்மதன் படம் தான் ரசிகர்களை கவர்ந்தது என்றே கூறலாம்.

மன்மதன் ஹீரோவாக முதலில் நடிக்க இருத்தது யாரு தெரியுமா? அதுவும் மொட்டை கதாபாத்திரத்திலா?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top