தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளிவந்தது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் இன்று இரவு இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தனுஷ் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக சற்று முன்னர் இந்த படத்திற்கு ’நானே வருவேன்’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
அதுமட்டுமின்றி தனுஷ் ஸ்டைலாக சிகரெட் பிடித்தபடி இருக்கும் ஸ்டில் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாஸ் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
ஆனால் அதே நேரத்தில் இதே டைட்டிலில் ஒரு படம் கடந்த 1992ஆம் ஆண்டு ஸ்ரீபிரியா நடித்து இயக்கிய ஒரு திரைப்படம் வெளிவந்து உள்ளது என்பதும் ஏற்கனவே வெளிவந்த டைட்டிலை தான் செல்வராகவன் இந்த படத்திற்கு தேர்வு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
யுவன் சங்கர் ராஜாவின் அபாரமான இசையில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
#S12 #naanevaruven #NV pic.twitter.com/sZc1qLgZp5
— Dhanush (@dhanushkraja) January 13, 2021