6 ஆஸ்கர் விருது வாங்கிய படத்தை சுமார் என கூறிய தனுஷ்… கடுப்பில் ரசிகர்கள்…!

நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமல்லாமல் இதர மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ஹிந்தியில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அட்ராங்கி ரே படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இன்று வெளியாகியுள்ளது.

கலாட்டா கல்யாணம்கலாட்டா கல்யாணம்

இப்படத்தில் தனுஷ் தவிர அக்‌ஷய் குமார், சாரா அலிகான் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல நிகழ்ச்சியான கரன் ஜோஹர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரனில் நடிகர் தனுஷும் சாரா அலிகானும் சமீபத்தில் பங்கேற்றிருந்தனர். அப்போது இந்தியாவில் எந்த இயக்குனருடன் நீங்கள் அடுத்து பணியாற்ற விரும்புகிறீர்கள் என கரன் ஜோஹர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தனுஷ் ராஜமெளலி உடன் பணியாற்ற விரும்புவதாக கூறினார். இதனை தொடர்ந்து சமீபத்தில் வந்த படங்களில் எது ரொம்ப மிகைப்படுத்தப்பட்டதாக உங்களுக்கு தோன்றியது என கரன் ஜோஹர் கேட்டார்.

உடனே கடந்த ஆண்டின் சிறந்த படம் உட்பட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருது பெற்ற dhanபடத்தை தனுஷ் கூறினார். இத்தனை பிரிவுகளில் ஆஸ்கர் விருது வென்ற படத்தை தனுஷ் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

என்னங்க வெறும் 6 ஆஸ்கர் தானே வாங்கிருக்கு. ஆஸ்கர் வாங்கிட்டா அந்த படம் நல்ல படமா என்பதுபோல தனுஷின் பதில் இருப்பதாக பலர் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment