இளம் இயக்குனருக்கு சிபாரிசு செய்யும் தனுஷ்…. தயங்கும் தயாரிப்பாளர்கள்…. காரணம் என்ன?

கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று கலக்கிய தமிழ் நடிகர் என்றால் அது தனுஷ் தான். இவர் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் ஒரு இளம் இயக்குனருக்காக தயாரிப்பாளர்களிடம் நடிகர் தனுஷ் சிபாரிசு செய்து வருகிறாராம்.

தனுஷ்-இளன்

சினிமாவை பொருத்தவரை சிபாரிசு என்பது வழக்கமான ஒன்று தான் என்றாலும், நெருங்கிய நட்பு அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தால் மட்டுமே ஒரு நடிகரோ இயக்குனரோ மற்றவர்களுக்கு சிபாரிசு செய்வார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷ் இளம் இயக்குனர் ஒருவருக்கு சிபாரிசு செய்து வருகிறார்.

அதன்படி தமிழில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் வெளியான பியர் பிரேமா காதல் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் இளனுக்கு தான் தனுஷ் தற்போது தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்து வருகிறாராம். அதாவது இயக்குனர் இளன் சமீபத்தில் தனுஷை நேரில் சந்தித்து கதை கூறி ஓகே செய்துள்ளார்.

தனுஷிற்கும் அந்த கதை மிகவும் பிடித்து விட்டதாம். தொடர்ந்து இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால், கதை பிடித்திருந்தாலும், இளன் கூறிய பட்ஜெட் அதிகமாக இருப்பதால் தயாரிப்பு தரப்பு மறுத்து விட்டார்களாம். அதனால், தனுஷே வேறு தயாரிப்பாளர்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம்.

அந்த வகையில், தற்போது சினிமா பைனான்சியர் மதுரை அன்புவிடம் தனுஷ் சிபாரிசு செய்த்துள்ளாராம். கதை நன்றாக இருக்கிறது. படம் தயாரியுங்கள் நிச்சயம் வெற்றிபெறும் என கூறியுள்ளாராம். கதை பிடித்துள்ள ஒரே காரணத்திற்காக தான் தனுஷ் இயக்குனர் இளனுக்கு சிபாரிசு செய்து வருகிறாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என கோலிவுட்டில் கேள்விகள் எழுந்து வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment