பிரச்சனைகள் மத்தியில் தனுஷ் படத்தின் அடுத்த அப்டேட் -ரசிகர்கள் மகிழ்ச்சி.!

தமிழ் சினிமாவிலேயே தற்போது பெரும் குடும்ப பிரச்சனையில் சிக்கி உள்ளவராக காணப்படுகிறது நடிகர் தனுஷ்தான். ஏனென்றால் இவர் தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்ய உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

dhanush aishwarya 2

மேலும் கடந்த சில நாட்களாக தனுஷை தங்கள் வாரிசு என்று சொல்லிக்கொண்டு மதுரை தம்பதிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அமைதியாக இருந்த இந்தப் பிரச்சினையும் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆரம்பிக்க தொடங்கிவிட்டதாக காணப்பட்டது.

201810270406400496 Case filed against actor Dhanush SECVPF

இருப்பினும் கூட நடிகர் தனுஷ் இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தனது சினிமாவில் முழுமூச்சாக இறங்கி செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றும் உருவாகி உள்ளது.

அதற்கான டீசர் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் தற்போது தனுஷின் மற்றொரு திரைப்படம் பற்றிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி கலாநிதி மாறன் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

thiruchitrambalam

இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் அப்டேட் நாளையதினம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் தனுஷ் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.